fbpx
Homeபிற செய்திகள்நெஞ்சுவலிக்கு முதலுதவி குறித்து செய்முறை பயிற்சி

நெஞ்சுவலிக்கு முதலுதவி குறித்து செய்முறை பயிற்சி

கண்ணம்பாளையம் பேரூராட்சி மற்றும் ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நெஞ்சுவலி ஏற்பட்டால் முதலுதவி செய்து எப்படி உயிரைக் காப்பாற்றுவது பற்றிய செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கூறுகை யில், அவசர உதவி செய்து மனித உயிர்களை எப்படி காப்பாற்றுவது போன்ற பயிற்சிகளை மருத்துவர்கள் தெளிவாக எங்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.

இவ்வகையான செய்முறை பயிற்சியில் கலந்து கொண்டது எங்களுக்கு மனநிறைவைத் அளித்தது என்றனர்.

நிகழ்வில் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், செயல் அலுவலர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் சண்முகம் மற்றும் பத்மநாபன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img