Homeபிற செய்திகள்நெகிழி ஒழிப்பு - கோவை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்

நெகிழி ஒழிப்பு – கோவை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற் குட்பட்ட கொண்டயம்பாளையம் ஊராட்சியில் லட்சுமி கார்டன் பகுதியில் கொண்டயம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் மோகன் த¬ லமையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொண்டயம்பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சண்முகசுந்தரம், ஐடிசி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சென்று நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகளை எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரி யர்கள் சுஜாதா, இந்திராணி ,பாலாதிரிபுர சுந்தரி, இரண்டாவது வார்டு உறுப்பினர் ரா மன், முத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img