கோவை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி வையம் பாளையத்தில் நாராயணசாமி நாயுடுவின் மணி மண்டபம் அமைந்துள்ளது. இங்கு அவரது 97வது பிறந்த நாள் விழா, அரசு மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், கோவை வடக்கு வருவாய் வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன், அன்னூர் தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நாராயணசாமி நாயுடு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



