fbpx
Homeபிற செய்திகள்நாகை ப்ரூடன்பெர்க் பயிற்சி மையத்தை பார்வையிட்ட இந்தியாவிற்கான துணைத் தூதர்

நாகை ப்ரூடன்பெர்க் பயிற்சி மையத்தை பார்வையிட்ட இந்தியாவிற்கான துணைத் தூதர்

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தில் ஃப்ரூடன்பெர்க் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு அறக்கட்டளை மேற்கொண்டு வரும் சேவைகளை பார் வையிட, சென்னையில் உள்ள இந்தியாவிற்கான ஜெர்மனி துணைத் தூதர் கரின்ஸ்டோல் வந்திருந்தார்.

ஃப்ரூடன்பெர்க் அறக்கட்டளை யின் பிராந்திய அறங்காவலர் ஜார்ஜ் கிராஃப் அவருக்கு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, சமீபத்தில் நாகப்பட்டினத்தில் உள்ள ஃப்ரூடன் பெர்க்கின் தொழிற்பயிற்சி மை யத்தினை பார்வையிட்டார்.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினைத் தொடர்ந்து ஃப்ரூடன் பெர்க்கின் தொழிற்பயிற்சி மையம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவது மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப தொழிலுக்கு உதவுவது என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த 2009-ம் ஆண்டுதொடங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 இருக்கைகள் கொண்ட இந்த தொழிற்பயிற்சி மையத்தில் 120 இளம் மாணவர்கள் ஜெர்மனி தொழிற்பயிற்சி முறையை பின்பற்றி கல்வி கற்றும் நடைமுறை பயிற்சி பெற்றும் தேர்ச்சி பெறுகிறார்கள்.

இதுவரை சுமார் 1000 இளம் மாணவர்கள் வெல்டர்கள், ஃபிட்டர்கள், மெஷினிஸ்ட்கள், மெக்கானிக்குகள் (மோட்டார் வாகனம்) மற்றும் எலக்ட்ரீஷியன்கள் என தங்கள் வாழ்க்கையைத் தொடங்க தொழில் முறை பயிற்சி பெற்றுள்ளனர்.

நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த முயற்சி, இந்தியாவுடன் ஜெர்மனி கொண்டுள்ள நல்லுறவின் பிரதிபலிப்பாகும். இந்த பயிற்சி மையம் இளைஞர்களுக்கான வேலை வாய்புக்களை உருவாக்குவதுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று கரின்ஸ்டோல் குறிப்பிட்டார்

ஃப்ரூ டன்பெர்க் அறக்கட்டளையின் பிராந்திய அறங்காவலர் ஜார்ஜ் கிராஃப் பேசுகையில், பாடநெறியைப் பொறுத்து ஓரிரு வருடகாலத்திற்கு ஜெர்மன் இரட்டைத் தொழிற்கல்வி முறைக்கு இணங்க இளைஞர்கள் கோட்பாடு மற்றும் நடைமுறைப் பாடங்களைப் பெறுவது இப் பயிற்சியின் சிறப்பம்சமாகும்.
பயிற்சி பெற்றவர்களில் 90% பேருக்கு படிப்புகளை முடித்த உடனேயே வேலை கிடைக்கிறது.

பெரும்பாலானோர் சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள பிரபலமான நிறுவனங்களில்வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்றார்.

கரிஸ்டோல், ஃப்ரூடன்பெர்க் பயிற்சி மையத்தின் முதல்வர் டாக் டர் சித்ரகலாவுடன் இணைந்து வகுப்பறைகளை பார்வையிட்டார்.

மையத்தின் மாணவர்கள் தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக வடிவமைத்த புதுமைகள் மற்றும் திட்டங்களை அவர் மிகவும் பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img