தேனி மாவட்டம், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பணி யாளர்களின் எண்ணி க்கை, வருகை பதிவேடு, வைப்பறை, விவசாயிக ளுக்கு உரங்கள் விநியோ கம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் நிருப ர்களிடம் தெரிவித்ததாவது:
வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட் டக்கலைத்துறை, கூட்டுறவு த்துறை உள்ளிட்ட துறை களின சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி, வேளாண் பெருங்குடிமக்களை பயன் பெற செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1009 மெ.டன்னும், (MFL& IFFCO) 1121 மெ.டன்னும்(Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 533 மெ.டன்(IPL) மற்றும் கலப்பு உரங்கள் 3006 மெ.டன்னும் (FACT, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
காமாட்சிபுரம் தொட க்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் குறித்து ஆய்வு மேற்
கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்பட்டு, பயடைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
ஆய்வின் போது, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, சம்பந்த ப்பட்ட துறை அலுவ லர்கள், காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உதவி செயலாளர் மணிக ண்டன், முதன்மை எழுத்தர் ஜெயபிகாஷ் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.