அவினாசிலிங்கம் மகளிர் உயர் கல்வி நிறுவனம், பொறியியல் புலம் சார்பில் கோவையில், தொழில் துறையில் வளர்ந்து வரும் போக்குகள் 4.0 மற்றும் நிலையான கருத்துகள் பற்றிய சர்வதேச மாநாடு நேற்று (பிப்.24) நடந்தது.
பொறியியல் புலம் முதன்மையர் முனைவர் பா.சற்குணம் வரவேற்றார்.
அவினாசிலிங்கம் நிறுவன வேந்தர் பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன், தலைமை தாங்கி பேசினார்.
கருத்தரங்க புத்தக வெளியிடு நடை பெற்றது. 162 முழு நீள தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டு புத் தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிறப்பு விருந்தினர் குஜராத், காந்திநகர், டிசைன் இந்தியன் இன்ஸ் டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி, முன்னாள் ஐஐடி பம்பாய் பயிற்சிப் பேராசிரியர் முனைவர் ஸமீர் ஸஹஸ்ரபுதே பேசும்போது, 3ஞி அனிமேஷனில் செயல்படுத்தக்கூடிய சில நுட்பங்களையும் முறைகளையும் அவர் பரிந்துரைத்தார்.
இவர், கல்வித்துறையில் அனி மேஷனை செயல்படுத்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு அனிமேட்டர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
மின் கற்றலில் பயன்படுத்தக்கூடிய அனிமேஷன் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். 2009 முதல் பல்வேறு நிறுவனங்களில் பிளெண் டரைப் பயன்படுத்தி 3ஞி அனி மேஷனில் கிட்டத்தட்ட 15 பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார்.
ஜிகா ஸ்டுடியோவில்
அவர் ஜிகா ஸ்டுடியோவில் டிஜிட்டல் அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் குறித்த 2 படிப்புகளை முடித்துள்ளார். போரவ னின் பஞ்சகன்யாக்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார். மாணவர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதில ளித்தார். முதன்மையர் ஜூடித் ஜஸ்டின் நன்றி கூறினார்.
ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர் கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்தல் மற்றும் தொழில்துறை 4.0 இல் பணிபுரிதல், தொடர்பு கொள்ள மற்றும் சமீபத்திய போக்குகள் பற்றிய தகவல்களைப் பரப்புதல், பங்குதா ரர்களுக்கு அவர்களின் தொழில்துறை 4.0 வின் ஒருங்கிணைந்த அம்சங் களைப் பற்றி மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்குதல் ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்கள் ஆகும்.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து வந்த பங்கேற்பாளர்கள் தங்களது படைப்புகளை நேரடியா கவும், மெய்நிகர் முறையிலும் அந் தந்த துறைகளில் சமர்ப்பித்தனர். காகித விளக்கக்காட்சியில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்ஙகளைப் பற்றிய நுண்ணறிவை எடுத்துரைத் தனர்.