ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022ல் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) செல்வராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வெங்கடேஷ் உட்பட பலர் உள்ளனர்.



