தேசிய அளவிலான சிலம்பம், மற்றும் யோகா போட்டிகளில், 24 தங்கம் வென்ற கோவை மாண வர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. தேசிய அளவிளான ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ், டோர்ன மென்ட் போட்டிகள், யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில், கோவா பகுதியில் உள்ள கலிங்கூட் என்ற இடத்தில் கடந்த 22ம்தேதி முதல் 24 ம் தேதி நடை பெற்றது.
இதில் சிலம்பம், யோகா, கபடி, வாலிபால், கராத்தே, டேக்வாண்டோ, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஹரியாணா, போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள கோவை மாவட்டத்தில் இருந்து, சூலூர் அடுத்த காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள, லெமன் ஸ்போர்ட்ஸ் ரௌத்திரா அகாடமி சார்பில், 14 வயது முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் 34 பேர் கலந்து கொண்டு, சிலம்ப போட்டிகளில், 15 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மேலும் யோகா போட் டிகளில், கலந்து கொண்ட கோவை மாணவர்கள், இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண் கலம் வென்றனர்.
பரிசுகளையும் பதக்கங்களையும் வென்ற மாணவர்கள் நேற்று கோவை சூலூர் அடுத்த காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்திற்கு வந்தடைந் தனர்.
அவர்களுக்கு சூலூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்து 24 பதக்கங்களை பெற்று வந்தமைக்காக பாராட் டுக்களைத் தெரிவித்தனர்.



