fbpx
Homeபிற செய்திகள்தேசிய நெடுஞ்சாலை ஆணையம் - கே.பி.ஆர் கல்லூரி ஒப்பந்தம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் – கே.பி.ஆர் கல்லூரி ஒப்பந்தம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டிட பொறியில் துறைக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டிட பொறியியல்துறை ஆசிரியர்கள், மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சில குறிப்பிட்ட சாலை திட்டங்களில் உள்ளிருப்புப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) பெறவும் உதவும்.

இந்த ஒப்பந்தம் மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ளிருப்பு பயிற்சியை பெறுவதற்கு மட்டுமே வாய்ப்பளிக்கும், தவிர இது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேலை வாய்ப்புக்குரியதல்ல என்று கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img