கோவாவில் கடந்த 3 நாட்களாக தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நடந்தது.
போட்டியில் மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பாக திருப்பூர் ஆர்எஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு வீரர்கள் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில்தியா சஞ்சு -தங்கம், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 200 மீ. ஓட்டத்தில் பிரசாந்த் குமரன் தங்கம், 1500 மீ. ஓட்டத்தில் எகேந்திரன் -வெண்கலம், நீளம் தாண்டுதலில் சந்திரா ஆதித்யா -தங்கம், 400 மீ. ஓட்டத்தில் காதர் அலி -தங்கம், 400 மீ. ஓட்டத்தில் சபரிசுகாஷ்- வெண்கலம், குண்டு எறிதலில் சிவரத் தினம் -தங்கம் ஆகியோர் பதக்கங்களை பெற்றனர்.
தமிழகத்திற்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் சர்வேதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களை ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி உடற்கல்வி ஆசிரியரும் ஆர்எஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளருமான எம். பிரபு பயிற்சி அளித்து ஊக்குவித்து வருகிறார்.
பதக்கம் வென்று திரும்பிய வீரர், வீராங்கனைகளை திருப்பூர் ரயில் நிலையத்தில் பெற் றோர்கள், உறவினர்கள், ரோட்டரி செலிப் ரேஷன் சங்கத்தின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.



