திருப்பூர் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரின் சுதந்திரப் போராட்டத்தில் புகழ்பெற்ற திருப்பூர் குமரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக அதற்கான பெயர் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கோரிக்கை வைத்த திருப்பூர் மக்களுக்கும் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கும் பெருமைப்படக்கூடிய வகையில் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே அமைச்சகத்திற்கும் மத்திய அரசுக்கும் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



