fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் மதிமுக சார்பில் மதநல்லிணக்க பொங்கல் துரை வைகோ தொடங்கி வைத்தார்

திருப்பூரில் மதிமுக சார்பில் மதநல்லிணக்க பொங்கல் துரை வைகோ தொடங்கி வைத்தார்

திருப்பூரில் தமிழர் திரு நாளாம் தை திருநாளை முன்னிட்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் 25 ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மாவட்ட செயலாளர். நாகராஜன், தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ பொங்கல் பொருட்களை கொடுத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக வாத்தியங்கள் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஜாதிமத பேதமின்றி மும் மதத்தினரும் சேர்ந்து 24 வது வார்டுக்குட்பட்ட 100 வீதிகளில் வசிக்கும் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவரவர் வீடுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களுக்கு, விலை உயர்ந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு பரிசுகளை துரை வைகோ வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது:

ஆளுநர் என்பவர் தமிழ்நாட்டுக்கு பொது வான ஒரு மனிதராக செயல்பட வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செயல்படுவதில்லை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் போல் செயல்படுகிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஈஷா மையம் என்பது சுற்றுலா தளம் அல்ல, அது ஒரு கோயில் அவ்வளவுதான். சட்டப்படி யோகா மையத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அநேக மக்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img