fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆய்வு

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆய்வு

தருமபுரி நகராட்சி, வார்டு எண் 3, காமாட்சி அம்மன் தெரு நகராட்சி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் தெரு அருகே அமைந்துள்ள சனத்குமார் நதியின் ஆற்றை நேரில் சென்று பார்வையிட்டார்.


ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழு தடைந்த தரைமட்ட பாலத்தை மாற்றி புதிய பாலம் அமைத்தல், ஆற்றில் கழிவு நீர் கலப்ப தால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு குடிநீர் பாதிக்கப்படுகிறது.

ஆற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆற்றில் வருகின்ற நீர் தேங்காமல் எளிதில் சென்றடையும் வகையில் ஆற்றின் இருபுறமும் உள்ள முட்செடிகள், புதர்களை அகற்றி தூர் வார தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்க டேஷ்வரன் வலியுறுத்தினார். 

படிக்க வேண்டும்

spot_img