fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்தில் பஞ்சு உற்பத்தி பரப்பு 4.53 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும் ராசி சீட்ஸ் அலுவலக திறப்பு...

தமிழகத்தில் பஞ்சு உற்பத்தி பரப்பு 4.53 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும் ராசி சீட்ஸ் அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழ்நாட்டை பஞ்சு தயாரிப்பில் முதன்மை இடத் திற்கு கொண்டு செல்ல தேவைப்படும் எல்லா முயற் சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும், பஞ்சு உற்பத்தி பரப்பளவு 3.5 லட்சம் ஏக்க ரிலிருந்து 4.53 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும் என்றும் ராசி சீட்ஸ் அலு வலக திறப்பு விழாவில் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை புளியகுளம் பகுதியில் ராசி சீட்ஸ் தலைமை அலுவலகம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற் றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தெலுங்கானா அமைச்சர் நிர ஞ்சன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு, அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட் டியும், குத்துவிளக்கு ஏற்றி யும் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேசியதாவது:தற்போது தமிழகம் பஞ்சு விளைச்சலில் நாட்டின் மூன்றாவது இடத்தில் இருக் கிறது. அரசு தமிழ்நாட் டை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்த ஆண்டில் தமிழக அரசு நெல் சாகுபடியை 5 லட்சம் ஏக்கர் அதிகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் வறட்சி மற்றும் வெள் ளத்தை தாங்கும்

நெல் வகைகள் அறிமுகம் செய்யப்பட உள் ளது. இதே போல் மற்ற பயிர் வகைகளின் ஆற்றலை கூட்டும் பொருட்டிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பஞ்சு விளைச்சல் பரப்பளவை 3.5 லட்சம் ஏக்கரிலிருந்து 4.53 லட்சம் ஏக்கராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சித்துறை அமைச் சர் கே என் நேரு பேசுகையில், “ விதைகளின் ஆற்றலை பெருக்க நுகர்வோர்-சார் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளை பொருத்து முயற் சிகள் செய்ய வேண்டும்.

நெல் வகைகள் பல உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை பெரும்பாலும் வீரியம் இல்லாமல் அழிந்து விட்டன. இவ்வாறு அழியாதவாறு சிறந்த குணங்கள் கொண்ட விதைகளை நாம் ஆராய்ச்சி யின் மூலம் உருவாக்கி விவ சாயிகளுக்கு பலன் அளிக் கும் வழியில் அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், ராசி சீட்ஸ் நிர்வாக இயக்குனர் ராமசாமி, பேயர் இந்தியா லிமிடெட்டின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img