Homeபிற செய்திகள்டெக்னோ ஸ்மார்ட்போன்களில் வளைவான டிஸ்பிளே அறிமுகம்

டெக்னோ ஸ்மார்ட்போன்களில் வளைவான டிஸ்பிளே அறிமுகம்

டிரான்ஸ்சயன் இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டான டெக்னோ மொபைல், வழக்கத்திற்கு மாறான அம்சங்களுடன் கூடிய முதன்மையான ஸ்மார்ட் போனான ஃபேண்டம் எக்ஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத் தியுள்ளது.

புதிதாக அறிமு கப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் முதன்முறை யாக வளைவான டிஸ்பிளே உள் ளது. மிகக்குறைவான விலையாக ரூ.25,999/-ல் இது கிடைக்கும்.

கவனத்தை ஈர்க்கும் 108எம்பி அல்ட்ரா ஹெச்டி மோடு செட்டப் உடன் லேசர் நுட்பமிக்க 50 எம்பி13 எம்பி8 எம்பி முன்புற கேமராவைக் கொண்டுள்ளது ஃபேண்டம் எக்ஸ். இந்த கேமராவில் இருக்கும் 1ஃ1.3 இன்ச் மிகப்பெரிய சென்சார் காரணமாக மிகவும் குறைவான ஒளி உள்ள சூழலிலும் படம்பிடிக்க முடியும்.

13ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படும் இந்த போனில் உள்ள அல்ட்ரா-ஃபாஸ்ட் எல்பிடிடிஆர்4எக்ஸ் 8ஜிபி வழங்கும் கூடுதல் 5 ஜிபி மெமரி பியூஷன் தொழில்நுட்பத்தின் மூலமாக அதிவேகத்தை தரும்.

டிரான்ஸ்சயன் இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலர் அரிஜீத் தலபாத்ரா, ‘இளைய தலைமுறையை இலக்காக கொண்டுள்ள ஒரு பிராண்டாக, ஆச்சர்யமான வடிவமைப்புகள், புதுமையான சிறப்பம்சங்களுடன் கூடிய தொழில்நுட்பத்தில் மேம் பட்ட சாதனங்களை வழங்குகிறது டெக்னோ.

எங்களது இளம் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதை மனதில் இருத்திக்கொண்டு, இந்திய சந்தையில் ஃபேண்டம் எக்ஸ் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. நீடித்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் விளைவு இந்த ஸ்மார்ட்போன்.

‘எதற்காகவும் செயல்படாமல் போய்விடக்கூடாது’ எனும் எங்களது தாரக மந்திரத்தில் உறுதியாக இருக்கும் வகையில், நல்லதொரு போட்டியை ஏற்ப டுத்தும் விலையில் பிரீமியம் தொழில்நுட்பத்தை எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கு கிறது எங்களது நிறுவனம்’ என்றார்.

இரண்டாயிரமாவது ஆண்டையொட்டி பிறந்த இளம் தலைமுறைக்காக உருவாக்கப் பட்ட பேண்டம் எக்ஸ், இயக்கத் திறனை மேம்படுத்தவல்ல 33 டபிள்யூ ப்ளாஷ் அடாப்டர் மற்றும் 4700 எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரி உடன் முதன்மையான வெப்பக் குழாய் குளிர்மைத் தீர்வையும் கொண் டுள்ளது.

ஒருமுறை ஃபேண்டம் எக்ஸ் வாங்கும்போது, வாடிக்கையாளர் கள் ரூ.2,999/- மதிப்புள்ள ஒரு   ப்ளூடூத் ஸ்பீக்கரை பரிசாகப் பெறுவார்கள். இதோடு, ஒருமுறை ஸ்கீரினை மாற்றும் சலுகையும் உண்டு.

படிக்க வேண்டும்

spot_img