fbpx
Homeபிற செய்திகள்டுசீன் நோய் விழிப்புணர்வு தினம்

டுசீன் நோய் விழிப்புணர்வு தினம்

உலக டுசீன் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 7ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினம் தமிழ்நாட்டில் கோவையில் இயங்கி வரும் மரபணு பரிசோதனை ஆலோசனை ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் (MDCRC) 2014ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருடத்தை போன்று இவ்வருடமும் இணையம் மூலமாக குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள், மருத்துவ குழு உறுப்பினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து செப்டம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூன்று நாள் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் காலை 9 மணிக்கு கடந்த வருடங்களின் முன்னோட்ட வீடியோவுடன் தொடங்கப்பட்ட இவ் விழாவில் மாலையில் நீயா நானா புகழ் கோபிநாத் சிறப்புரை ஆற்றினார். அதை தொடர்ந்து டாக்டர்.

லக்ஷ்மி, ஸ்ரீதேவி(மனநல நிபுணர்), டாக்டர் நூருல் அமின் ஷாஹித் மற்றும் 400 பார்வையாளர்கள் வரை கேள்வி பதில் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இவ்வருட டுசீன் தினத்தின் நோக்கம் “டுசீன் இளைஞர்களின் வாழ்வியல்”, செப்டம்பர் 8ம் தேதி காலம் காத்திரு காயம் பொறுத்திரு என்ற குறும்படம் MDCRC-யால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

டுசீன் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தில் நிகழும் சில உணர்வுகள் மிக அழகாக இப்படத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

செப்டம்பர் 9ம் தேதி டுசீன் நோயால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளின் கொரோனா பற்றிய விழிப்புணர்வுகள், ஓவியங்கள், கையால் செய்யப்பட்ட மாதிரிகள், அவர்களின் திறமைகள் அதற்கு ஊக்குவிப்பவர்களை பற்றி வீடியோ பதிவுகள் மற்றும் அவர்களின் அழகான புகைப்பட பதிவுகள் பதிவேற்றப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img