fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் மோஹன்ஸ் மருத்துவமனை சார்பில் ஆக.7-ம் தேதி நீரிழிவு முகாம்

டாக்டர் மோஹன்ஸ் மருத்துவமனை சார்பில் ஆக.7-ம் தேதி நீரிழிவு முகாம்

டாக்டர் மோஹன்ஸ் நீரி ழிவு சிறப்பு மையம் சார்பில், கோவையில் வரும் 7-ம் தேதி கண், பாத பரிசோதனை முகாம் நடை பெறுகிறது.
உலகிலேயே சர்க்கரை நோயில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இளைஞர்கள் கூட நீரிழிவு நோயால் அதிகம் பாதிக் கப்படுகிறார்கள்.

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் கண் மற்றும் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் அதிகரித் துக் கொண்டே வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் இரத்த குளுக்கோஸ் அளவை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

நீரிழிவு நோயை கட்டுப் பாட்டில் வைக்க சரியான முறையில் உடற்பயிற்சி செய்தல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண் டும்.
இதனை கருத்தில்கொண்டு மக்களுக்காக இந்தியாவின் முன்னணி நீரிழிவு மருத்துவம னையான, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம், வரும் 7-ம் தேதி காலை 6.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நீரிழிவுக்கான மாபெரும் கண் மற்றும் பாத பரிசோதனை முகாமை, கோவை அவிநாசி சாலையில் உள்ள அண் ணாசிலைக்கு அருகில் உள்ள மையத்தில் நடத்துகிறது.

சிறப்பு அம்சங்கள்: இலவச உணவு ஆலோசனை, கண் சிகிச் சை, சீரற்ற இரத்த சர்க்கரை அளவை கண்டறிதல், இரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (ஙிவிமி).கோவை டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நீரி ழிவு சிறப்பு மருத்துவர் பாமா பொன்மணி கூறுகையில், “துர திர்ஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது.

வேறு ஏதோ பிரச்சனைக்காக சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வரு கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்காவிட்டால் அது கண், பாதம், இதயம் மற்றும் சிறுநீ ரகம் உள்பட அனைத்து உறுப் புகளையும் பாதிக்கக்கூடும்“ என் றார்.முகாமிற்கு வருகை தந்து இதனை சரியான முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்புக்கு: 7825888656/ 04224258888.

படிக்க வேண்டும்

spot_img