fbpx
Homeபிற செய்திகள்ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து அச்சக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து அச்சக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட அச்சகதார் சங்கம் சார்பில் அவர்கள் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மற்றும் பொள்ளாச்சி அச்சக சங்கங்கள் இதில் பங்கேற்றனர். இதில் கோவை மாவட்ட அச்ச கத்தார் சங்க தலை வர் குமாரவேல் தலைமை வகித்தார்.

பெரும்பாலான பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதை கண்டித்தும் சாதாரண காகிதம் ஒரு டன் 7,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும் ஆர்ட் போர்ட் பேப்பர் டன் னுக்கு 50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதை கண்டித் தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் காகித விலையை கட்டுப் படுத்த வேண்டும். பிளேட் விலையை கட் டுப் படுத்த வேண்டும். கெமிக்கல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். காகித ஆலைகள் தினசரி விலையை ஏற் றக்கூடாது.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். காகித ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத் தியும் ஆர்ப்பாட்டம் மேற் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து கோவை மாவட்ட அச்சகதார் சங்க தலைவர் குமாரவேல் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் இருந்து மீண்டு வரும் பொழுது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தி விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பலமுறை மத்திய அரசிற்கு கோ ரிக்கை வைத்தும் எவ் வித முடிவும் எட்டப் பட வில்லை எனவும் தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img