ஜி.எஸ்.டி வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் வரிச்சுமை போகப் போக குறையும் என்று நினைத்த மக்களுக்கு, வரி மேலும் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில் முக்கிய முடிவாக சில்லறை விற்பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியினை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பணவீக்கத்தினால் பல பொருட்களின் விலையும் அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவானது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
எதற்கெல்லாம் ஜிஎஸ்டி? பேக் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பெயரிடப்பட்ட இறைச்சி (உறைந்த பொருட்கள் தவிர) என அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மீன், தயிர், தேன், கோதுமை மற்றும் பிற தானியங்கள், கோதுமை மற்றும் மெஸ்லின் மாவு, வெல்லம், அரிசி என பலவும் இந்த லிஸ்டில் அடங்கும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவால் இறைச்சி, பால், தயிர், பன்னீர், தேன், பிரெட் வகைகள், மாவு வகைகள், மீன்கள் என பலற்றின் விலை அதிகரிக்கும். இது மட்டும் அல்ல, இது சார்ந்த அனைத்தும் விலையேற்றம் காண இது வழிவகுக்கும்.
மோட்டார் பம்புகள், பால் பண்னை இயந்திரங்களுக்கான வரி 12%-ல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர எல்இடி பல்புகள், விளக்குகள் பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கும் 12%-ல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மனை படுக்கைகள் 5000-க்கு மேல் உள்ள அறை வாடகைக்கு, ஐடிசி இல்லாத அறைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் அச்சுத்தொழில் பட்டாசு தொழில், நெசுவுத்தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகி உள்ளது. சிறு குறு தொழில்களை அழித்து கார்ப்பரேட்டை வளர்க்கும் நடவடிக்கையோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சில பொருட்களுக்கே வரி குறைக்கப்பட்டுள்ளது அல்லது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பொது மக்களில் பெரும்பாலானோர் கடும் அதிருப்தியில் தான் உள்ளனர்!



