Homeபிற செய்திகள்சேவாலயா பாரதி செல்லம்மா ரத யாத்திரை தர்மபுரி வருகை

சேவாலயா பாரதி செல்லம்மா ரத யாத்திரை தர்மபுரி வருகை

சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் கடையம் வரை சேவாலயா பாரதி செல்லம்மா ரத யாத்திரை செல்கிறது.

இந்த ரதம் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணிய சிவா மணி மண்டபம் வளாகத்தில் இருந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரிக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட வருகை புரிந்தது.

ரதத்தை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் வரவேற்று மரியாதை செலுத்தி, மாணவ, மாணவிகளிடம் பாரதி வாழ்க்கை வரலாறு, அவர் தேசத்திற்கு செய்த சமூகப் பணி போன்றவற்றை விளக்கி பேசினார். பின்னர் ரதத்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கல் லூரியின் முதல்வர், சேவாலயா நிர்வாகி திலகவதி, நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரிபெரியசாமி, ஒன்றிய செயலாளர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சோனியாவெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ஒ.கே.எஸ்.குமார், சக்தி, மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img