68-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, ஈ.டி.679 செல்லப்பகவுண்டன்வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று (நவ.18) கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
துணைப்பதிவாளர் (பால்வளம்) ஈரோடு ஜெ.ராஜராஜன் தலைமை வகித்தார்.
கால்நடை சிகிச்சை முகாமினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்து உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
ஈ.டி.679 செல்லப்பகவுண்டன் வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், வேம்பத்தி ரெவின்யூ கிராமத்தை சார்ந்த செல்லப்பகவுண்டன்வலசு, தாளக் குட்டைப்புதூர், ஓசைப்பட்டி, தோட்டக்குடியான்பாளையம், முனியப்பன்கோவில், வே.வெள்ளாள பாளையம் ஆகிய கிராமங்களை செயல் எல்லையாக கொண்டு அப் பகுதி விவசாய பெருமக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரம் பெருக அரும்பாடுபட்டு வருகிறது.
இச்சங்கத்தில் உறுப்பினர்களிடம் இருந்து தினசரி 2000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஈரோடு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வரு கிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற ஒரே நோக்கோடு முதல்வர் பல்வேறு நலத் திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுடைய பொருளாதார நிலையினை மேம்பாடு அடைய செய்து வருகிறார்.
முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினைபார்த்தல், கோமாரி நோய் தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை கண்டறியப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்கோ நிறுவனம் சார்பில் இலவசமாக மருந் துகள் வழங்கப்படுகின்றன என்றார்.
ஈரோடுஆவின் துணைப் பொது மேலாளர் டாக்டர்சொர்ண குமார் சிறப்புரை ஆற்றினார். ஈரோடு ஆவின் கால்நடை மருத்துவர்கள் டாக்டர் எஸ்.சண்முகம் தினேஷ்குமார், சௌந்தரபாண்டியன், மோகன்ராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தது.
ஈ.டி.679 செல்லப்பகவுண்டன் வலசு பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு சங்கத் தலைவர் தங்கராசு வரவேற்றார். செயலாளர் மகேஷ் குமார் நன்றி கூறினார்.
முகாமில் 258க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.



