Homeபிற செய்திகள்செயல்பாடுகளின் 20-வது ஆண்டு விழா- ஸ்கைவேஸ் குழுமம் கொண்டாட்டம்

செயல்பாடுகளின் 20-வது ஆண்டு விழா- ஸ்கைவேஸ் குழுமம் கொண்டாட்டம்

இந்தியாவில் கடந்த 1983-ம் ஆண்டு துவக்கப்பட்ட ஸ்கைவேஸ் குழுமம் தளவாடத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் 40-வது ஆண்டு விழா மற்றும் சென்னை செயல்பாடுகளை துவக்கிய 20-வது ஆண்டு விழாவை, கொண்டாடியது ஸ்கைவேஸ் நிறுவனம். தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியா முழுவதும் தனது செயல்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஸ்கைவேஸ் குழுமத் தலைவர் எஸ்.எல். சர்மா கூறுகையில், எங்கள் புகழ்பெற்ற பயணத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் குழுமத்தின் 40-வது நிறுவனர் தினம் என்பது நெறிமுறை, மதிப்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒரு வரலாற்று மைல்கல் ஆகும்.

கடந்த 40 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருவதோடு, தொழில் அதிபர்கள், பங்குதாரர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் நலன் கருதி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். தளவாடத்துறையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் நாங்கள், தற்போது தென்னிந்தியாவில் உள்ள தொழிற்சாலை நிறைந்த நகரங்களுக்கு எங்கள் சேவைகளை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்.

எங்கள் குழும நிறுவனங்களில் ஒன்றான பாரின் கன்டெய்னர் லைன் நிறுவனம் கடல்வழி சார்ந்த தளவாட போக்குவரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எனவே, அந்த நிறுவனத்தின் மூலம் இப்பிராந்தியத்தில் கடல்சார்ந்த வணிகங்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தளவாட போக்குவரத்தில் முக்கிய சேவையை வழங்க இருக்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img