fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் புதுப்பிக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு

சென்னையில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் புதுப்பிக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு

மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் திறந்துள்ளது.

தென் சென்னை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் இந்த ஷோரூமை திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கருணாநிதி, மலபார் கோல்ட் அன்ட் டை மண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலத் தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வர்த்தக இணைத் தலைவர் ராஜசேகரன், மண்டலத் தலைவர்கள் அமீர், சுதீர், அண்ணாநகர் கிளைத் தலைவர் சமீர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன், பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட் ’ஆகியவை ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.

மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 270 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், ஆகிய நகரங்களில் 17 கிளைகளை கொண்டுள்ளது.

இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டின நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளையும் மட்டுமே விற்பனை செய்கிறது
வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img