fbpx
Homeபிற செய்திகள்சூரத்தில் அமேசான் டிஜிட்டல் கேந்திரா: குஜராத் முதல்வர் திறந்து வைத்தார்

சூரத்தில் அமேசான் டிஜிட்டல் கேந்திரா: குஜராத் முதல்வர் திறந்து வைத்தார்

அமேசான் இந்தியா நிறுவனத்தின் முதல் டிஜிட்டல் கேந்திராவை குஜராத் மாநிலம் சூரத்தில் காணொலி மூலம் துவக்கி வைத்தார், குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி.

சூரத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை இந்த கேந்திரா மையம் பூர்த்தி செய்யும்.

இணைய வழி பலன்கள் குறித்து அறியவும், ஏற்றுமதி, தளவாட ஆதரவு பொருட்கள் அட்டவணைப்படுத்துவதில் உதவி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட சேவைகளை இந்த மையம் வழங்கும்.

டிஜிட்டல் தொழில்முனைவோராக தங்கள் பயணத்தை தொடங்கவும், ஜிஎஸ்டி மற்றும் வரிவிதிப்பு குறித்தும் அவர்களுக்கு உதவும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திறப்பு விழாவில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசுகையில், சூரத் நகரம் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களின் இருப்பிடமாக உள்ளது.

இந்த கேந்திராவை பயன்படுத்தி இந்நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற்று டிஜிட்டல் தொழில்முனைவோராக மாற வேண்டும் என்றார்.

அமோசான் இந்தியா மூத்த துணைத் தலைவரும், இந்தியாவிற்கான தலைவருமான அமித் அகர்வால் பேசுகையில், வரும் 2025-ம் ஆண்டில் ஒரு கோடி இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் மையமாக்க ஒரு பில்லியன் டாலரை முதலீடு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது என்று நாங்கள் அறிவித்திருந்தோம்.

அந்த இலக்கை அடைவதற்கான முதல்படியாக தற்போது சூரத்தில் இந்த கேந்திரா மையத்தை துவக்கி உள்ளோம்.

உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கேந்திரங்களை நிர்வகிக்க உள்ளோம். விற்பனையா ளர்களாக பதிவு செய்ய விரும்பினாலும் அல்லது அமேசானின் பிற திட்டங்களான அமேசான் குளோபல் செல்லிங், அமேசான் பே, அமேசான் கரிகர், அமேசான் சாஹேலி, ஐ ஹேவ் ஸ்பேஸ், அமேசான் ஈசி ஆகிய திட்டங்களில் இணையவும் இந்த கேந்திரா உதவி செய்யும் என்றார்.

இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் மனிஷ் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img