fbpx
Homeபிற செய்திகள்சீர்மிகு நகர திட்டப் பணிகள் - ஒருநபர் ஆணைய தலைவர் ஆய்வு

சீர்மிகு நகர திட்டப் பணிகள் – ஒருநபர் ஆணைய தலைவர் ஆய்வு

சீர்மிகு நகர திட்டப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் டேவிதார் (ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி) தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் சாலைகள் , தெருவிளக்குகள், குடிநீர் விநியோகம், பூங்கா மேம்பாடு, பக்கிள் ஓடை அபிவிருத்தி, பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகள், மழைநீர் வடிகால்,பாதாள சாக்கடை திட்ட பணிகள் உள்ளிட்ட 84 வகையான பணிகளை கடந்த 28, 29ம் தேதிகளில் ஆணையர் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மாநகராட்சி மைய அலுவலகக் கூட்ட அரங்கில் மாநகராட்சி அலுவலர்கள் இடையேயான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது .

இதில் மாநகராட்சி ஆணையர், செயற்பொறியாளர் (பணிகள் மற்றும் திட்டம்), மாநகர் நல அலுவலர், உதவி செயற்பொறியாளர் (பணிகள் மற்றும் திட்டம்), உதவி ஆணையர் (பணியமைப்பு), கணக்கு அலுவலர், உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் (பணிகள்), மின் கண்காணிப்பாளர் மற்றும் திட்ட கண்காணிப்பு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img