fbpx
Homeபிற செய்திகள்சீனியர் ஹாக்கிப் போட்டி: பி.எஸ்.ஜி.கல்லூரி வெற்றி

சீனியர் ஹாக்கிப் போட்டி: பி.எஸ்.ஜி.கல்லூரி வெற்றி

கோவை மாவட்ட அளவிலான சீனியர் ஹாக்கிப் போட்டியில், பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி குமரகுரு கல்லூரி அணியை வீழ்த்தியது.
இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சீனியர் ஆண்களுக் கான ஹாக்கிப் போட்டிநடத் தப்படுகிறது. இதற்கான கோவை மாவட்ட அள விலான போட்டி, சிஐடி கல்லூரி மைதானத்தில் நடந்தது.

இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியும், குமரகுரு கல் லூரி அணியும் மோதின. இதில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி 7-1 கோல் கணக்கில் வென்றது.

பி.எஸ்.ஜி. அணியின் பிரமோத், ஸ்ரீராம், வினோத் ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் மண்டல அளவிலான போட்டியில் பங் கேற்க பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி தகுதி பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பரிசுகள் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img