பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு சிறுமுகை காவல் ஆய்வாளர் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் காவலர்கள் ஒன்றிணைந்து புத்தரிசி பொங்கலிட்டு, பொங்கல் பொங்கி வரும் பொழுது பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
சிறப்பு விருந்தினராக ஜடையம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் ராஜா,ராயப்பன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட காவலர்கள் பலர் திரளாக ஒரே மாதிரியான கலர் ஆடையில் கலந்து கொண்டு இப்பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.