Homeபிற செய்திகள்சிறுகுறு தொழில் முனைவோருக்காக கோவையில் கனரா வங்கி சுலப் கிளை-நிர்வாக இயக்குனர் சத்தியநாராயண ராஜு துவக்கி...

சிறுகுறு தொழில் முனைவோருக்காக கோவையில் கனரா வங்கி சுலப் கிளை-நிர்வாக இயக்குனர் சத்தியநாராயண ராஜு துவக்கி வைத்தார்

கோவையில் கனரா வங்கி, சிறுகுறு தொழில் முனைவோருக்கு உதவும் தனது புதிய சுலப் கிளை சேவையை அறிமுகப்படுத்தியது. வங்கியின் சென்னை வட்டார முதன்மைப் பொது மேலாளர் எஸ்.ராமசுப்ரமணியன், கோவை-2 மண்டல மேலாளர் டி.சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயல் இயக்குநர் கே.சத்தியநாராயண ராஜு இந்த கிளையைத் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் தலைமை அலுவலக பொது மேலாளர் எம்.ஜி.பண்டிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செயல் இயக்குநர் கே.சத்தியநாராயண ராஜு பேசும்போது, சிறுகுறு தொழில் கடனுக்கான முக்கியத்துவம் மற்றும் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார், இதில் சுலப் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வங்கியின் சென்னை வட்ட முதன்மைப் பொது மேலாளர் எஸ்.ராமசுப்ரமணியன் பேசும்போது, கனரா வங்கியின் இந்த சுலப் வசதி வாடிக்கையாளர்களுக்கு உதவும் மையமாக இருக்கும் என்றும், இந்த பிராந்தியத்தில் அத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கான கடன்கள், ஆலோசனைகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றுடன் சிறுகுறு தொழில் முனைவோரின் தேவைகளை பிரத்தியேகமாக பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img