fbpx
Homeபிற செய்திகள்சிறப்பு அம்சங்களுடன் ‘தி லெர்னிங் ஆப்’ செயலி அறிமுகம்

சிறப்பு அம்சங்களுடன் ‘தி லெர்னிங் ஆப்’ செயலி அறிமுகம்

டிஜிட்டல் முறை கல்வியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் எக்ஸ்ட் ராமார்க்ஸ், தனது புதிய ‘லோகோ’வை அறிமுகம் செய்தது. அத்துடன் தனது ‘தி லெர்னிங் ஆப்’ செயலியை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைத்து புதிய பதிப்பையும் வெளியிட்டுள்ளது.

புதிய செயலியில், ‘வேடிக்கையாக கல்வி கற்றல்’, ‘கற்றலை ஊக்குவித்தல்’, ‘ஒருங்கிணைந்த படிப்புகள்’ ஆகியவற் றுடன், டிஜிட்டல் மு¬ றயில் கற்பதற்கான அனைத்து நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

ஒவ்வொரு பாடமும் காட்சி முறையில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் வகையில் வெளி வந்திருக்கிறது.

‘தி லெர்னிங் ஆப்’ செயலி ஒரு முழுமையான அனுபவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. மழலையர் கல்வி முதல் 12-ம் வகுப்பு வரையிலும், ஜெஇஇ மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

பள்ளிப் பாடங்களுக்கான தீர்வுகளுடன், நேரலை வகுப்புகளும் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

எக்ஸ்ட்ராமார்க்ஸ் தலைமை செயல் அதிகாரி ரித்விக் குல்ஸ்ரேஸ்தா கூறுகையில், தொற்றுநோய் காரணமாக, டிஜிட்டல் முறையிலான கற்றல் என்பது முன்பைவிட மேலும் வளர்ச்சியடைந்து மாணவர்கள் இடையே கற்றல் ஆர்வத்தை ஈர்த்துள்ளது.

எங்களின் புதிய அடையாளம் (லோகோ), குழந்தைகளின் உயிர் சக்தியைப் பிரதிபலிக்கிறது. படைப்பாற்றல், பன்முகத்தன்மை, எதிர் காலத்திற்காக மற்றும் நவீனயுகத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள விரும்பும் அனைத்து வயது கற்பவர்களுக்கும் ஏற்ற வகையில் கற்றல் செயலியையும், புதிய லோகோவையும் மறு அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.

எக்ஸ்ட்ராமார்க்ஸ் கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கற்பித்தலுக்கான சிறந்த தீர்வுகளை வழங்கி வரும் முன்னணி டிஜிட்டல் கல்வி தீர்வுகள் வழங்கும் நிறுவனமாக விளங்கி வரு கிறது.

எக்ஸ்ட்ராமார்க்ஸ் இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கு, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img