Homeபிற செய்திகள்சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கல்

சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் உட்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு பாடங்களிலும் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளையும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img