fbpx
Homeபிற செய்திகள்சிறந்த தேசிய மாணவர்படை மாணவர்களுக்கான விருது

சிறந்த தேசிய மாணவர்படை மாணவர்களுக்கான விருது

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர்படை மாணவர்களான, சுதந்திரபொம்மன், விஷ்வா, பிரபாகரன் ஆகியேருக்கு தமிழக அரசின் உதவித்தொகை கிடைத்துள்ளது.

ஆண்டு தோறும் தேசிய மாணவர்படை மாணவர்களை தமிழக அரசு கௌரவித்து வருகின்றது. மாணவர்களின் படிப்பு திறன் ,நன்னடத்தை, சேவை மனப்பாண்மை, சிறந்த அணிவகுப்பு பயிற்சி, ஆளுமை தன்மை இவற்றின் அடிப்படையில் தமிழக அளவில் தேசிய மாணவர்களை தேர்ந்தெடுத்து நிதி உதவி அளித்து கௌரவித்து வருகின்றது.

இந்த ஆண்டு புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியின் தேசிய மாணவர்படை மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதற்கான விருதை இரண்டு தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படையின் தலைமை அதிகாரி கர்னல் சி.சந்திரசேகர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் திரு.ஆல்பர்ட் அலெக்சாண்டர் உடன் இருந்தார். விருது பெற்ற மாணவர்களையும், பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலரையும், பள்ளியின் தாளாளர் அருட்பணி பால்ராஜ், தலைமையாசிரியை அமலோற்பவ மேரி மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் பாராட்டினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img