Homeபிற செய்திகள்சிமேட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் 5எஸ் பயிற்சிக்கான ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்

சிமேட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் 5எஸ் பயிற்சிக்கான ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்

சிமேட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் கில் 5ஷி பயிற்சிக்கான ஒரு நாள் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம், உள் தர உறுதிப் பிரிவு மற்றும் கல்வித் தொழில்நுட்பப் பிரி வினால் ஏற்பாடு செய்யப்பட்டது.


பிஎம்க்யூஆர் சர்ட்டிபிகேஷன் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி ஆடிட்டர் ரகுநாதன், பங்கேற்பாளர்களுக்கு ஒரு நிறுவனத்திலும் தனிப்பட்ட அளவி லும் கவனிக்க வேண்டிய பல்வேறு நடவ டிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தார்.


5ஷி ஆனது கழிவுகளை குறைக் கவும், ஒழுங்கான பணியிடத்தை பராம ரிப்பதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்ப டுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டு பராமரிப்பு, அமைத்தல், ஒளிர்தல், தரப்படுத்துதல் மற்றும் நிலை நிறுத்துதல் ஆகியவை இந்த 5எஸ் வரிசைப்படுத் தல்களாகும்.

சிமேட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் எப்போதும் இதுபோன்ற அனைத்து அம்சங்களிலும் முறையான நடத்தையை உறுதி செய்கிறது. ஆசிரி யர்களுக்கான இந்த 5ஷி பயிற்சியானது செயலாக்க நேரத்தையும், மதிப்பற்ற செயல் பாடுகளையும் குறைக்கிறது. செயல்திறனை அதிகரிக்கிறது.


சிமேட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் பசுமையான வளாகமாக இருந்து வருகிறது. இந்த பயிற்சி, தேவையற்ற பொருட்களை குறைக்கவும், பணியிடத்தை சுத்தமாக பராமரிக்கவும் உதவும்.

மதியம் நடைபெற்ற செயல்பாட்டு அமர்வில், முந்தைய அமர்வின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட செயல்பாட்டில் பணியாற்ற ஆசிரியர்கள் தனிக் குழுக் களாக அமைக்கப்பட்டிருந்தனர். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடனும், விழிப்புணர்வுடனும் பங்கு பெற்ற தால் இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி பெற்றது. சிமேட்ஸ் நிறுவனர் மற்றும் அதிப ரான டாக்டர் என்.எம்.வீரய்யனின் வழி காட்டுதலாலும், விடாமுயற்சியாலும் இவை அனைத்தும் சாத்தியமானது.

படிக்க வேண்டும்

spot_img