Homeபிற செய்திகள்சிஎஸ்கே அணியுடன் இணைந்த ப்ரூக் பாண்ட் 3 ரோசஸ்

சிஎஸ்கே அணியுடன் இணைந்த ப்ரூக் பாண்ட் 3 ரோசஸ்

இந்தியாவில் மிகவும் விரும்பப் படும் தேயிலை பிராண்டுகளில் ஒன்றான ப்ரூக் பாண்ட் 3 ரோசஸ், அதன் புதிய டிவிசி இது நம்ம டீ(ம்) என்பதை அறிமுகப்படுத்தியது.

அவர்கள் அதன் 15-வது பதிப்பிற்காக ஐபிஎல் அணியான ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ உடன் கூட்டு சேர்ந்தனர். சிஎஸ்கேயின் புதிய வீரர்களை ஏற்று நம்பி பார்வையாளர்களுடன் இணைவதற்கான ‘இது நம்ம டீ, இது நம்ம டீம்’ (இது எங்கள் தேநீர், இது எங்கள் அணி) என்ற செய்தியை பிரசாரம் முன் னிலைப் படுத்துகிறது.

புதிய சிஎஸ்கே அணியை பற்றி முதியவர், மனைவியிடம் ஒரு கப் டீயை அருந்திவிட்டு முணு முணுப்பதில் இருந்து டிவிசி தொடங்குகிறது. தேநீர் எப்படி இருக்கிறது என்று மனைவி கேட்டதற்கு, நிறம், சுவை, திடம் நன்றாக இருந்தால் அது சரியான தாக தான் இருக்கும் என் கிறார்.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் நன்றாக இருந் தால், ஆடுகளம் எப்படி இருந்தால் என்ன என்று மனைவி பதில் அளிக் கிறார். உரையாடலுக்கு இடையில், அவர்களின் பேரன் முதல் பந்திலேயே ‘ஒரு விக்கெட்’ என்று கத்து கிறான்.

பிடித்த அணியும் அவர்களுக்கு பிடித்த டீயும் பிரிக்க முடியாத சிஎஸ்கே ரசிகர்களுடன் இணையும் வகையில் ‘இது நம்ம டீ, இது நம்ம டீம்’ என்ற செய்தியுடன் விளம்பரம் முடிகிறது.

டீ அன்ட் ஃபுட்ஸ் (எச்யுஎல்) துணைத் தலைவர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறுகையில், ‘புரூக் பாண்ட் 3 ரோசஸ் தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் டீ பிராண்ட்.
இந்த ஆண்டு ஐபிஎல் லில் தமிழ்நாட்டின் விருப் பமான டீ(ம்), சென்னை சூப்பர் கிங்சுடன் கூட்டா ளியாக இருப்பதில் மகிழ்ச் சியடைகிறோம்.

எங்களின் இது நம்ம டீ(ம்) பிரசாரம் தமிழர்களின் 3 ரோசஸ் டீ மற்றும் சிஎஸ்கே மீது மிகுந்த அரவணைப்பு மற் றும் பாசத்துடன் அன்பை கொண்டாடுகிறது’ என் றார்.

மைண்ட்ஷேர் மூத்த துணைத் தலைவர் அஜய் மேத்தா கூறுகையில், ஐபி எல் சீசனுடன், ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒருங்கிணைக்கும் மற்றும் பிராண் டின் ஒற்றுமையின் தத்துவத்துடன் நன்றாக எதிரொலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணை வதற்கு இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தினோம் என் றார்.

படிக்க வேண்டும்

spot_img