சேலம் தேசிய நெடுஞ்சாலை முதல் ஏலகிரி வழியாக சாமிசெட்டிப் பட்டி ஓம் சக்தி பள்ளி வரை 4.6 கிலோ மீட்டர் மாநில சாலையை அகலப் படுத்தி, புதுப்பிக்க கோரி கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரிடமும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடமும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடர்ந்து வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.
அதன் பேரில் பணிக்கான ரூபாய் 4.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பங்கேற்று சாலை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மேலும், நெடுஞ்சாலைத்துறை அலுவல ர்களிடம் பணியை தரமா கவும், விரைவாகவும் செயல் படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராசு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் முருகன், பழனிஅறிவு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாதையன், வளர்மதிதமிழ்செல்வன் மற்றும் சிவப்பிரகாசம், தவமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



