fbpx
Homeபிற செய்திகள்சரியான முடிவு

சரியான முடிவு

ஹைஹவேசில் வாகனங்களின் வேகத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இத னால் நூற்றுக்கணக்கான பேர் மரணமடைகின்றனர். இந்நிலையில் ஹைவேசில் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்கும் உத்தரவு அதிர்ச்சியை அளித்தது. இதனிடையே மத்திய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது சரியான முடிவு, வரவேற்கத்தக்கது.

எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்திலும் தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தற்போது அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2013ல் மட்டும் சாலைவிபத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதற்கு கூடு தல் வேகம் தான் காரணம். 2019ல் 1,51,417 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். 4.69 லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சாலை மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வேகம் அதிகரிக்கப்பட்டதாக கூறிய விளக்கத்தை ஏற்க முடியாது. எனவே 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு பிறப்பித்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு அறிவி ப்புப்படி வாகனங்களுக்கு 60 முதல் 100 கி.மீ. வேக த்தை நிர்ணயிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img