கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்க ளுக்கான மூலப் பொருட்கள் கலக்கும் திருவிழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் எதிரில் அமைந்துள்ள ஹாஷ் 6 ஹோட்டலில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை டாக்டர் லீமா ரோஸ் தொடங்கிவைத்தார்.
விழாவுக்கு ரோஜா தலைமை தாங்கினார். பொதுமேலாளர் கார்த்தி கேயன் முன்னி லை வகித்தார். விழாவில் கேக் தயாரிக்கும் கலவை யுடன் தேங்காய், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்டாச்சியோ பழங்கள், ஆரஞ்சு தோலுரித்தல், கறுப்பு கரும்பு, அத்திப் பழம், உலர்ந்த உப்பு, இலவங்கப்பட்டை மற்றம் கிராம்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டது.
இந்தக் கலவை விழாவில் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்த கலவைகளை கலக்கினார்கள்.
இவற்றுடன் விஸ்கி, ரம், ஓட்கா, ஜின், பீர் போன்ற மதுக்களும் தங்கப் பாகு, வெல்லப்பாகு, தேன் மற்றம் வெண்ணிலா சாரம் போன்றவற்றை கலந்து இந்த கேக் கலவையை 200 கிலோ எடை வரும் வரை கலந்தார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தலைமை சமையல் கலைஞர்களை போல் உடையும், தலைப்பாகையும் அணிந்து இருந்தனர். விழாவின் போது, இவர்கள் கேக்குகள் செய்வதற்காக மூலப் பொருள்களை சரியான விகிதத்தில் கலந்தார்கள்.



