fbpx
Homeபிற செய்திகள்கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் மகளிர் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது வழங்கல்

கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் மகளிர் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது வழங்கல்

கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் வி.ஜி.எம்.அறக்கட்டளை மற்றும் கோவை கிழக்கு இன்னர்வீல் சங்கம் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத், நிர்வாக இயக்குனர் ராதா பிரசாத், கோவை கிழக்கு இன்னர்வீல் சங்க தலைவி ஜெயலட்சுமி செயலாளர் ஜாய்ஸ் தாமஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் சிறந்த சேவை புரிந்த பெண் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் டாக்டர் மீரா கிருஷ்ணா, நந்தினி, உண்ணாமலை ஆகியோருக்கு டாக்டர் வி. ஜி.மோகன் பிரசாத் விருதுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img