கோவை விமான நிலைய ஓடுதளம் விரி வாக்கத்துக்கு நிலம் அளித்தோர்க்கு இழப்பீடு வழங்க ரூ.1,132 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கான உத்தரவை போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு விவரம்:- கோவை விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக நான்கு பிரிவுகளாக நிலங்கள் பெறப்பட்டுள்ளன.
அதில், முதல் பிரிவில் நிலங்களை அளித்தோருக்கு ரூ.351.51 கோடியும், இரண்டாவது பிரிவில் நிலம் அளித்தோருக்கு ரூ.192.73 கோடியும், மூன்றாவது பிரிவில் நிலம் அளித்தோருக்கு ரூ.417.46 கோடியும், நான்காவது பிரிவில் நிலம் அளித் தோருக்கு ரூ.417.46 கோடியும் இழப்பீடு 4 பிரிவுக்கு வழங்கியது உள்பட மொத்தமாக ரூ.1,132.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதற்கான போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியை எடுத்து அதனை உரிய இழப்பீடுதாரர்களுக்கு வழங்கும் உரிமையை மாவட்ட ஆட்சியர் பெற்றுள்ளார். இவ்வாறு உத்தரவில் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.



