கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளில் வார்டு மறுவரையறை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் தலைவர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் சுந்தரவல்லி, மறுவரையறை ஆணைய உறுப்பினர்/ நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, மாவட்ட கலெக்டர்கள் சமீரன் (கோவை), கார்மேகம் (சேலம்), வினீத் (திருப்பூர்) மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் உள்ளனர்.



