fbpx
Homeபிற செய்திகள்கோவை- மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் பெ.நா.பாளையத்தில் நின்று செல்ல வலியுறுத்தல்

கோவை- மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் பெ.நா.பாளையத்தில் நின்று செல்ல வலியுறுத்தல்

கோவையில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளை யத்திற்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை பெரியநாயக்கன்பாளையத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஊர்காவல் படை கமாண்டர் ஜெயக்குமார் சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையம் 1873-ம் ஆண்டு கட்டப்பட்டது.

மிகவும் பழுதடைந்திருந்த இந்த ரயில் நிலைய கட்டிடத்தை கடந்த 2016-ம் ஆண்டு, எல்.எம்.டபிள்யு. நிறுவனம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் கலையம்சத்துடன் புனரமைத்து புதுப்பித்தது.

இவ்வழியே இயக் கப்பட்ட ரயிலை பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்கள், பயனீர், யுனைடெட் கலை அறிவியல் கல்லூரிகள், ஆயிரக் கணக்கான மாணவர்கள் மற்றும் எல்.எம்.டபிள்யு ,பிரிக்கால் போன்ற தொழிற்சாலைகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள், அலுவலக பணி யாளர்கள், பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வந்தனர்.

குறைந்த கட் டணம் என்பதால் குறிப் பாக ஏழை, எளிய கிரா மப்புற மாணவர்கள் இந்த ரயில் சேவையை பெரிதும் நம்பியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2020 மார்ச் முதல், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்தப் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் 2021 மார்ச் மாதம் முதல் மீண்டும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது காரமடை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்கிறது.சாதாரண ரயிலாக இயக்கப்பட்டபோது 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதால் 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இச்சூழ்நிலையில், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டுமானப் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.

இதனால் சாலைப் போக் குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன் பாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்லாததால், இதை நம்பியிருந்த அனைவரும் சாலை மார்க்கமாக பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்த சாலைகளில் தினந்தோறும் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளி கல்லூரிகளை திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழக்கம் போல் பெரி யநாயக்கன் பாளையம் ரயில் நிலையத்தில் பய ணிகள் ரயிலை நிறுத்த வேண்டும், பழைய நடை முறைப்படியே 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img