மேம்பாலம் வேலை நடப்பதால், கோவை – மேட்டுப்பாளையம் சாலை ஜி.என். மில்ஸ் பிரிவுக்கு பஸ் இல்லாத காரணத்தால் பள்ளி – கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



