கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இணைய வழியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூலை 26) நடந்தது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்று வந்தது.
தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, இணைய வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் , பொது மக்கள் சேவை மையம், இ-சேவை மையம் ஆகியவற்றின் மூலமும் மனுக்களை சமர்ப்பிக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவிற்கு துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்கள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து இணைய வழியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பட்டா மாறுதல் நில அளவை, புதிய குடும்ப அட்டை முதியோர் ஓய்வூதியம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக் களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர்கள் பெற்றுக் கொண்டனர்.
இணைய வழியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுக்கள் அளித்த பொதுமக்களிடம், மாவட்ட ஆட்சியர் காணொளி வாயிலாக கோரி க்கைகளை கேட்டறிந்தார்.
சம்மந்தப்பட்ட துறை அலுவ லர்களிடம் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை குறித்த காலத்திற்குள் விரைந்து மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



