கோவை மாவட்டத்தில் 1428 நியாய விலை கடைகளின் மூலம் 10,78,484 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58.02கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 92 சதவீதத்துக்கும் மேல் பொது மக்கள் பெற்று பயனடைந்தனர்.
கொரோனா நிவாரண நிதி, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி என பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் 2022 சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதா ரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கு என மொத்தம் 2.15கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி மதிப்பில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட முதல்வர் ஆணையிட்டார்.
கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத்து றையின் கீழ் (இலங்கை அகதிகள் முகாம் உட்பட) செயல்படும் 1250 நியாய விலைக் கடைகள், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் 19 நியாய விலைக் கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 105 நியாய விலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 54 நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1428 நியாய விலை கடைகளின் மூலம் 10,78,484 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58.02 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இப்பரிசுத் தொகுப்பினை கோவை மாவட்டத்தில் 9,93,251 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் பெற்று (92 சதவீதத்துக்கும் மேல்) பொதுமக்கள் பெற்று பயனடைந்து பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர்.
முதல்வர் உத்தரவின்படி, இம்மாத இறுதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
மகழ்ச்சியுடன் கொண்டாடிய பொங்கல் தைத்திருநாள்
இப்பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்ற பூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சின்ராஜம்மாள் தெரிவித்ததாவது:
பொங்கல் பரிசுத் தொகுப்பினை மிகவும் தரமானதாகவும், சிறப்பான தாகவும், பொங்கல் பண்டி¬ கக்குத் தேவையான அனைத்து பொருட்களை உள்ளடக்கியத £கவும் முதல்வர் தந்துள்ளார்.
இப்பரிசு தொகுப்பில் 1. பச்சரிசி 1 கிலோ 2. வெல்லம் 1 கிலோ 3. முந்திரி 50கிராம் 4. திராட்சை 50கிராம் 5. ஏலக்காய் 10 கிராம் 6. பாசிப்பருப்பு 500 கிராம் 7. நெய் 100 கிராம் 8. மஞ்சள் தூள் 100 கிராம் 9. மிளகாய் தூள் 100 கிராம் 10. மல்லித்தூள் 100 கிராம் 11. கடுகு 100 கிராம் 12. சீரகம் 100 கிராம் 13. மிளகு 50 கிராம் 14. புளி 200 கிராம் 15. கடலை பருப்பு 250 கிராம் 16. உளுத்தம் பருப்பு 500 கிராம் 17. ரவை 1கிலோ 18. கோதுமை மாவு 1 கிலோ 19. உப்பு 500 கிராம் 20. துணிப்பை ஒன்று. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு ரவை, கோதுமை மாவு, உப்பு துணிப்பை, கரும்பு ஆகிய பொருட்கள் வழங்கப்படுவதால் மிகச்சிறப்பாக பொங்கல் திருநாளை மிகமகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.
இப்பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கி பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வழிவகுத்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்தூர்.



