கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளத்தை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் கள ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
உடன் துணை ஆணையாளர் ஷர்மிளா, நிர்வாக பொறியாளர்கள் உமா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சரவணக்குமார், சவிதா ஆகியோர் உள்ளனர்.



