கோவை பாங்க் ஆப் பரோடா, பிராந்திய அலுவலகத்தில், சிறு, குறு நிறுவனம், விவசாயம் மற்றும் வேளாண்மை பெரு நிறுவன வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
வாடிக்கையாளர்களின் பொருளாதார தேவைகள் கலந்தாய்வு செய்யப்பட்டு, உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டன.
நிகழ்ச்சிக்கு செயல் இயக்குநர் விக்ரமாதித்யா சிங் கிச்சி முன்னிலை வகித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய “வாடிக் கையாளர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு” குறித்த தமிழ், ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்ற பாங்க் ஆஃப் பரோடா ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி, கௌர வித்தனர்.
சென்னை மண்டல பொது மேலாளர் எஸ்.ரங்க ராஜன், சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை, திருச்சி பிராந்திய மேலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவை பிராந்தியத் துணைப் பொதுமேலாளர் கே.ஆர்.ககதால் செய்தி ருந்தார்.



