Homeபிற செய்திகள்கோவை காவல் நிலையத்தை அரசு பேருந்து ஓட்டுநர்கள் முற்றுகை

கோவை காவல் நிலையத்தை அரசு பேருந்து ஓட்டுநர்கள் முற்றுகை

கோவை சித்ரா பகுதியில் இருந்து வெள்ளலூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி வருபவர் அஸ்வந்த்குமார். இவர் நேற்று வழக்கம் போல பணி செய்து கொண்டு இருந்துள்ளார் அப்போது கோவை டவுன்ஹால் ராயல் தியேட்டர் சிக்னலில் நிறுத்தியுள்ளார்.

பின்பு சிக்னல் கிடைத்ததும் பேருந்தை வழக்கம்போல இயக்கியுள் ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் திடீரென சறுக்கி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் விழுந்துள் ளனர்.

இந்த நிலையில் பேருந்தின் பம்பர் இழுத்துக் கொண்டு சென்றுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த புஷ்பராணி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் அந்த வாகனத்தை ஓட்டிவந்த மோகன் ராஜ் என்பவர் பலத்த காயத்துடன் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இது சம்மந்தமாக கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு மேற்கு காவல் நிலைய போலீசார் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த வசந்த் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து போக்குவரத்து கழக தொழிலாளர் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலை யில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழில் சங்கத்தினர் தங்களிடம் சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், எதன் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் கேள்வியெழுப்பினர்.

இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணைகள் மேற் கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் அந்த சிசிடிவி காட்சிகளை காண்பித்து அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தான் தவறுதலாக சறுக்கி பேருந்து முன் சக்கரத்தின் மீது விழுந்துள்ளனர்.

இதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து கழக தொழில் அமைப்பினர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img