கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.எஸ். கல்லூரிகளின் தலைவர் சுப்பிரமணியம், தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
தொழில்நுட்ப இயக்குனர் நலின் விமல் குமார் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் கல்லூரியின் சாதனை அறிக்கையை வாசித்து வரவேற்புரை ஆற்றினார்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுடெல்லி DROO தலைவர் சஞ்சீவ்குமார்வர்ஷனே கலந்துகொண்டு கல்லூரியில் பயின்ற 2346 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய சஞ்சீவ்குமார் வர்ஷனே, நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் புதிய புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர்கள் துறைத் தலைவர்கள் மாணவ, மாணவியர், பெற்றோர் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



