தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழக அரசு பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக சட்டப் பேரவையில் முதல் வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களிலும், அரசு அலுவல கங்களிலும் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சமீரன், சமூகநீதி நாள் உறுதி ஏற்பு வாசகங்களை வாசிக்க, அரசு ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
சமத்துவம், சகோத ரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்ப டைத்து கொள்வேன் என்றும் மானுடபற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும் எனவும் சமூக நீதியே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூகநீதி நாளில் உறுதி ஏற்கிறேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



