கோவை காந்திபுரம் அடுத்த 100 அடி சாலை பகுதியில் வணிகர் சங்க விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின், பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதேசி நாயகன் வெள்ளையன் வழியில், இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அமேசான், ப்ளிப்கார்ட், வால்மார்ட் போன்ற இனையதள வர்த்தகத்தின் செயல் பாடுகளின் ஆதிக்கம் அதிக அளவில் ஈடுபட்டு, சிறு குறு வியாபாரிகளை நசுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது.
எனவே இதனை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டு காலமாக குரல் கொடுத்து வருகின்றோம். இதே போன்று அந்நிய நாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோகோகோலா போன்றவற்றையும் ஒழிக்க குரல் எழுப்பி வருகின்றோம்.
தமிழகத்தில் இதன் ஆதிக்கம் 85 விழுக்காடு குறைந்து விட்டது. இன்னும் 15 சதவிகிதம் மட்டுமே உள்ளது அதனையும் ஒழிப்போம்.
தற்போது அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட லூலூ நிறுவனம் தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் கால் பதிக்க உள்ளது. அவர்கள் 25 ஏக்கரில் மிகபிரமாண்ட வணிக வளாகங் களை ஏற்படுத்த உள்ளனர்.
இந்த லூலூ, தமிழகத்தில் கால் பதித்தால் தமிழகத்தில் உள்ள சிறு குறு வணிகர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படும், எனவே இதனை எதிர்த்து, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை சார்பில் போராட்டத்தை கையில் எடுத்து லூலூவை எதிர்த்து போராடுவோம், தமிழகத்தில் லூலூ கால் பதித்தால் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர்கள் சங்க பேரவையின் சார்பாக மாபெரும் போராட்டங்களை கையில் எடுப்போம்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவையின் கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர், ஜமீன் ராஜ், கோவை மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சித்திரை வேல், மூத்த முன்னோடி மாரிகண்ணு, செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், சித்தாபுதூர் பகுதி துணை செயலாளர் அருள், மற்றும் ரத்தினபுரி வணிகர் சங்க நிர்வாகிகள், கணபதி சுதேசி வணிகர் சங்க நிர்வாகிகள், மாநகர வணிகர் சங்க நிர்வாகிகள், மற்றும் பல்வேறு வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.