இரிடியம் கலந்த கலசம் விற் பனை செய்வதாக ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் மகரூப் (58), அப்துல் கலாம் (44). இவர்களை தொடர்பு கொண்ட கேரளாவை சேர்ந்த ஷாஜி, தனக்கு தெரிந்தவரிடம் இரிடியம் கலசம் இருப்பதாக கூறி அதில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் இருவரும், கடந்த மூன்றரை மாதங்களாக பல கட்டங்களாக, ரூ.27 லட்சம் வரை கொடுத்தனர். ஆனால், இரிடியம் கலசத்தை ஷாஜி தரவில்லை.
இதுகுறித்து அவர்கள் கேட்டபோது, கோவை ஒத்தக் கால் மண்டபத்தை சேர்ந்த முரு கேசனிடம் இரிடியம் கலசம் உள்ளதாகவும் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் ஷாஜி தெரிவித்தார். இதையடுத்து கோவை வந்த மகரூப், அப்துல் கலாம் ஆகியோர் முருகேசனை சந்தித்தனர்.
அப்போது முருகேசன் இரிடியம் கலசத்தை காண்பித்தபோது சந்தேகம் அடைந்த இருவரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில், முருகேசன் இருவரையும் கத்தியால் குத்த முயன்றார். அங்கிருந்து தப்பிய இருவரும் கோவை மாவட்ட போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஆறு பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறியதாவது:
பொதுவாக பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவர்களை இலக் காக கொண்டே இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன.
இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங் என்ற விஷயங்களே இல்லை. இவையனைத்தும் மக்களை ஏமாற்றும் வேலை. கோவையை சேர்ந்த முருகேசன்(36) மோசடி குழுவுக்கு மூளையாக செயல்பட் டுள்ளார். குழுவில், திருப்பூரை சேர்ந்த போஜ ராஜ் (42), ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார் (34), சூர்யாகுமார் (22), கோவையை சேர்ந்த செந்தில் குமார் (41), வெங் கடேஷ்பிரபு (26) ஆகிய ஆறு பேர் இருந்தனர்.
இவர்களில் தினேஷ்குமார், இரிடியம் பரிசோதனை செய்யும் நிபுணராக நடித்துள்ளனர். மற்றவர் களைப் பாதுகாப்புக்காக அழைத்து வந்துள்ளனர். இக்கும்பல் இரிடியம் விற்பதாக கூறித் தான் மகரூப், அப்துல்கலாமிடம் பணம் பெற்றுள்ளனர்.
ஆனால், உண்மையில் இக்கும்பல் இரிடி யத்தை விற்கவோ, வாங்கவோ செய்யாது. இரிடியம் நடவடிக்கைகள் உண்மை என நம்பவைக்க கள்ள நோட்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., ஆனந்த் ஆரோக்யராஜ் தலைமையில் , மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட தனிப் படையினர் ஆறு பேரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள ஷாஜியை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன. தினேஷ்குமார் மீது ஏற்கனவே புதுக்கோட்டையில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட் டதாக வழக்கு உள்ளது. முருகேசன் மீது கொலை வழக்கு உள்ளது.
இவர்களிடம் இருந்து, ரூ.99.20 லட்சம் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கத்தி, போலி கவச உடை, இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எஸ்.பி.செல்வநாகரத் தினம் தெரிவித்தார்.



